துணை பொது செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வேண்டுகோளுக்கு இணங்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் : ஏழை - எளியோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்

Jun 14 2018 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டி.டி.வி.தினகரன் வேண்டுகோளுக்‍கு இணங்க, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளும், ஏழை - எளியோருக்கு நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உள்ள தனியார் திருமண மஹாலில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தேனி மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் திரு.விஜயராமசாமி ஏற்பாடு செய்திருந்தார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கதிர்காமு கலந்துகொண்டு, இப்தார் நோன்பை துவக்கி வைத்தார். மேலும் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகரின் தண்டராம்பட்டு சாலையில் உள்ள மல்லிகா திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.ஆர்.தருமலிங்கம், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.செல்பாபு, தொழிலதிபர் திரு.ஜமாலுதின் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், இஸ்லாமிய பெருமக்‍களும் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் பேட்டையில், மாநகர் மாவட்ட கழகம், பகுதி கழகம் சார்பில் நோன்பு பெருநாளையொட்டி பித்ரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.கல்லூர்வேலாயுதம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அரிசியை அவர் வழங்கினார். நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் திரு.பால்கண்ணன், துணை செயலாளர்திரு. எம்.சி.ராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட 50வது வார்டு கழகம் சார்பில், நெல்பேட்டை பகுதியில் ஏழை - எளிய இஸ்லாமியர்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம், கழக இளைஞரணி செயலாளர் திரு. டேவிட்அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பரந்தாமன், மற்றும் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பகுதி வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் வடக்கு 1ஆம் பகுதி சிறுபான்மை பிரிவு சார்பில் அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு நிர்வாகி திரு.பரக்கத்அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி​யில், நோன்பு இருந்தவர்களுக்‍கு பழரசம், ஜூஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. ம.ஜெயபால், தெற்கு மாவட்ட கழக நிர்வாகி திரு.ஷ.ராஜலிங்கம், கழக இளைஞரணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை, கழக மகளிரணி செயலளர் வளர்மதி ஜெபராஜ், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பரந்தாமன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.நத்தர்ஷா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் திரு.ஹஸ்ஸன் மற்றும் கழக நிர்வாகிகளும், இஸ்லாமிய மக்களும் பெரும் திரளாக பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00