தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை நிரந்தரமாக மூட கோரிக்கை - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 9-வது நாளாக போராட்டம் : மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

Jun 14 2018 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்‍கோரி, பொதுமக்‍கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்‍கு அனுப்பாமல், 9-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்‍கிற்கு பொதுமக்‍கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேலத்தொட்டியபட்டி கிராமத்தில் செயல்படும் தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தின் கழிவு நீரால் நிலம் மாசுபட்டு அப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்‍கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்‍கோரி அப்பகுதி மக்‍கள் கடந்த 2 மாதங்களாக அறவழியில் போராடி வருகின்றனர்.

ஆனால், பொதுமக்‍களின் கோரிக்‍கையை ஏற்காத அதிகாரிகள், மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளருக்‍கு ஆதரவாக செயல்படுவதாகக்‍ கூறி, பொதுமக்‍கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்‍கு அனுப்பாமல் கடந்த 4ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 197 மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டர் நிறுவனத்தை மூட அரசு நடவடிக்‍கை எடுக்‍காவிட்டால், வாக்‍காளர் அட்டை, குடும்ப அட்டையை ஒப்படைத்துவிட்டு, ஊரைவிட்டு வெளியேறப்போவதாகவும் பொதுமக்‍கள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00