அதிகாரியின் தரக்‍குறைவான பேச்சால் மனமுடைந்த மதுரை அரசு மருத்துவமனை துப்புரவுப் பணியாளர் தற்கொலை - அதிகாரியை பதவி நீக்‍கம் செய்யக்‍கோரி ஊழியர்கள் போராட்டம்

Jun 14 2018 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர், அதிகாரியின் தரக்‍குறைவான பேச்சை தாங்கிக்‍கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில், பத்மாவதி ஒப்பந்த நிறுவனத்தின்கீழ், கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தனக்‍கன்குளத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் வைரமணி என்பவர், நேற்று மாலை தனது வீட்டில் தூக்‍கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன், தன்னை சாதிப் பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். தற்கொலை செய்து கொண்ட வைரமணிக்‍கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வைரமணியின் மரணத்திற்கு மேலாளர் ஹரிகிருஷ்ணன்தான் காரணம் எனக்‍கூறி, மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 300-க்‍கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பணியாளரின் தற்கொலைக்‍கு காரணமான மேலாளரை பதவி நீக்‍கம் செய்ய வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது.

மேலாளர் தரக்‍குறைவாக திட்டியதால் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்ததாகவும், அதிகாரிகளின் துணையுடன் லஞ்சம் பெற்றுக்‍கொண்டு பணியாளர்கள் நியமிக்‍கப்படுவதாகவும், மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00