18 எம்.எல்.ஏ.க்‍கள் தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட வழக்‍கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து - வழக்‍கு 3வது நீதிபதி விசாரணைக்‍கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி அறிவிப்பு

Jun 14 2018 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக எம்.எல்.ஏ.க்‍கள் 18 பேர் தகுதிநீக்‍கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி திருமதி இந்திராபானர்ஜி, எம்.எல்.ஏ.க்‍களின் தகுதி நீக்‍கம் செல்லும் எனவும், நீதிபதி திரு.எம்.சுந்தர் செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.

கழக எம்.எல்.ஏ.க்‍கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்‍கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி திருமதி.இந்திராபானர்ஜி, நீதிபதி திரு.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தமிழக அரசியலில் அதிக முக்‍கியத்துவம் தீர்ப்பு என்பதால், இதை அறிந்துகொள்வதற்காக மனுதாரர் தரப்பினரும், மூத்த வழக்‍கறிஞர்கள் மற்றும் பார்வையாளர்களும் அங்கு அதிக அளவில் குவிந்தனர். இருவரும் தனித்தனியே தீர்ப்பின் அம்சங்களை வாசித்தனர். சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்பதால், 18 எம்.எல்.ஏ.க்‍களை தகுதி நீக்‍கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி திருமதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.

அதேநேரம், சபாநாயகரின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்ட விதிகளுக்‍கு முரணாக இருப்பதால், எம்.எல்.ஏ.க்‍களை அவர் தகுதி நீக்‍கம் செய்தது செல்லாது என நீதிபதி எம் சுந்தர் தீர்ப்பளித்தார்.

இந்த மாறுபட்ட தீர்ப்புகளால் இந்தவழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்‍கு மாற்றப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி யார் என்பதை நீதிபதி திரு.குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00