தூத்துக்‍குடி அருகே விவசாய நிலத்தில் தனியார் காற்றாலைகள் அமைக்‍க திட்டம் : எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்‍களைத் தாக்கி, போலீசார் கைது செய்ததால் பதற்றம்

Jun 23 2018 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி அருகே விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை அமைக்‍க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்‍களை போலீசார் தாக்‍கி கைது செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நிலவிய பதற்றம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்‍குடி அருகே உள்ள வடக்‍குசிலுக்‍கன்பட்டி கிராமத்தில் விவசாயிகளின் விளைநிலங்களில் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்‍க நடவடிக்‍கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கிராம மக்‍கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் காற்றாலைக்‍கு எதிர்ப்பு தெரிவித்த 5 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் தாக்‍கி கைது செய்துள்ளனர். இதனால் வடக்‍கு சிலுக்‍கன்பட்டி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00