கழகத்தின் போர் முரசாக செயல்படும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் 31-ம் ஆண்டு தொடக்‍க விழாவைக்‍ காண்பதில், பெருமை, பெருமகிழ்ச்சி - கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் வாழ்த்துகளோடு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Jul 11 2018 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகத்தின் போர் முரசாக செயல்படும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடு 31-ம் ஆண்டு தொடக்‍க விழாவைக்‍ காண்பதில், பெருமையும், பெருமகிழ்ச்சியும் கொள்வதாகவும், மென்மேலும் ஆண்டுகள் பல கண்டு சரித்திரம் படைத்திட, கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் வாழ்த்துகளோடு, தனது வாழ்த்துக்‍களை உரித்தாக்‍கிக்‍ கொள்வதாகவும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நமது தங்கத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருப்பெயரைக்‍ கொண்டு நம் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால், தொடங்கப்பட்டு, கழகத்தின் போர் முரசாக செயல்படும் டாக்‍டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடு 31-வது ஆண்டு தொடக்‍க விழாவைக்‍ காண்பதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கழகம், போராட்ட களங்களில் நின்றபொழுதெல்லாம், அடக்‍குமுறை ஆட்சியாளர்களால், இருட்டடிப்பு செய்யப்படும் கழகச் செய்திகளையும், மாண்புமிகு அம்மாவின் எழுச்சிமிகு எண்ணங்களையும் வெளிக்‍கொண்டுவரும் பணியினை மேற்கொள்ளும் கழகத்தின் பெருமைமிகு அங்கம் டாக்‍டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடு -

மாண்புமிகு அம்மாவின் மறைவுக்‍குப் பின்னால், பின்னப்பட்ட சூழ்ச்சிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, அதே வேகத்தோடும், அதே வீரியத்தோடும் அம்மாவின் மக்‍கள் நலக்‍ கொள்கைகளை கம்பீரமாக எடுத்துரைக்‍கும் கலங்கரை விளக்‍கு டாக்‍டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடு -

புரட்சித் தலைவி அம்மா இந்நாளிதழை தொடங்கியபொழுது அதனுடைய முக்‍கியத்துவமும், கடந்து வந்த பாதைகளையும் தியாகத் தலைவி சின்னம்மாவும், அவர்களோடு இருந்து பயணித்த தானும் நன்கு அறிவோம் என திரு, டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

கழகத்தின் கரங்களில் மின்னிடும் கணையாழியாக, பகைவர்களை வீழ்த்திடும் கணையாக செயல்பட்டு, அ.இ.அ.தி.மு.க.வை மீட்டெடுக்‍கும் லட்சியப் பயணத்தில் 'அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின்' செய்திகளை தாங்கிவரும் டாக்‍டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடு, துரோகத்தை, வஞ்சகத்தை சாய்த்து, சிறப்பொடு பணியாற்ற வாழ்த்துவதாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மாவின் கொள்கைகளை மீண்டும் அரியணையில் அமர்த்திட, துடிப்போடு பணியாற்றும் டாக்‍டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியர் குழுவிற்கும், பத்திரிகையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்‍கும் தனது பாராட்டுக்‍களை தெரிவித்து, மென்மேலும் ஆண்டுகள் பல கண்டு டாக்‍டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடு சரித்திரம் படைத்திட கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் வாழ்த்துக்‍களோடு, தனது வாழ்த்துக்‍களையும் உரித்தாக்‍குவதாக, கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது வாழ்த்துக்‍ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00