கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையின்பேரில் கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம்கள் : ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Jul 11 2018 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆலோசனையின்பேரில், கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

தென்சென்னை வடக்‍கு மாவட்டம் சேப்பாக்‍கம்-திருவல்லிக்‍கேணி பகுதிக்‍ கழகம் சார்பில், கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் சிந்தாதரிபேட்டையில் நடைபெற்றது. இதில் முன்னால் அமைச்சரும் கழக தலைமை நிலைய செயலாளருமான திரு. P.பழனியப்பன், தென் சென்னை வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. V.P.கலைராஜன். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி கழக பகுதி செயலாளர் சேப்பாக்கம் திரு. L. ராஜேந்திரன் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக உறுப்பினர் சேர்க்‍கை முகாம்கள் நடபெற்று வருகின்றன. பெரியகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளர் திரு. சலீம்ராஜா கலந்துகொண்டார். தகுதி நீக்‍கத்தை எதிர்த்து வழக்‍கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினரான திரு. கதிர்காமு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நீலகிரி மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சட்டன் மற்றும் முத்தநாடு எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தனர். இதில் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன், மேலூர் ஒன்றியக்‍ கழகச் செயலாளர் திரு. ரவி ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00