திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : கணக்கில் வராத ரூ.78 ஆயிரம் பணம் பறிமுதல்

Jul 12 2018 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத 78 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களை சரிபார்க்கும் பணிகளில் விழுப்புரம் மாவட்ட பறக்கும் படையை சேர்ந்த முதன்மை வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.துரைசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. குண்டுமணி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் வாகன தணிக்கை சோதனைக்கு பேருந்து ஓன்றுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஓழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து லஞ்ச ஓழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணக்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஓழிப்பு போலீஸார் மறைந்திருந்து கண்காணித்தபோது பணம் கைமாறியது கண்டு நேரடியாக களத்தில் இறங்கினர். இந்த திடீர் சோதனையின் போது கணக்கில் வராத 78 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஓழிப்பு போலீஸார் கைப்பற்றி நள்ளிரவைத் தாண்டியும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00