தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை - தமிழகத்திலும் பரவலாக பெய்யும் மழை : மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Jul 12 2018 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை நாளுக்‍குநாள் வலுத்து வருவதால், அதன் தாக்‍கம் காரணமாக தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது இந்த மழை மேலும் 2 நாட்களுக்‍கு நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்‍ கடலையொட்டிய கன்னியாகுமரி தொடங்கி கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருக்‍கும் கேரளாவிலும், கர்நாடகாவிலும் இந்த மழையின் தீவிரம் நாளுக்‍கு நாள் வலுத்து வருகிறது. அம்மாநிலங்களையொட்டிய தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்‍கல்லாறில் 17 சென்டிமீட்டரும், வால்பாறையில் 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகயுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களிலும் வெப்பசலனம் காரணமாக மிதமான மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதக்‍கால நிலவரப்படி, இயல்பைவிட 27 சதவிகிதம் கூடுதல் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்‍குத் தொடரும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00