மருத்துவர்களுக்கு 6 மாத சோனோகிராபி பயிற்சி தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள அரசாணையை செயல்படுத்த தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Jul 12 2018 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவர்களுக்கு ஆறு மாத சோனோகிராபி பயிற்சி தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் ஜூன் 12 ல் பிறப்பித்துள்ள அரசாணையை செயல்படுத்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஐயர்பங்களாவை சேர்ந்த டாக்டர் டி.ராஜகுமாரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவிப்பதை தடுக்கும் சட்டம் அமலில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டு ரேடியாலஜிட்டுகள் பணிபுரிந்து வருகின்றனர். எம்பிபிஎஸ் முடித்து 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு ரேடியாலஜிஸ்ட் பயிற்சி முடித்து ஸ்கேன் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எம்பிபிஎஸ் முடித்து 6 மாதம் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஸ்கேன் பயிற்சி எடுப்பவர்கள் சோனாலாஜிஸ்ட்கள் என்ற பெயரில் வயிறு, அடிவயிறு பகுதிகளை ஸ்கேன் செய்து பார்க்கும் பணிகளை செய்கின்றனர். ரேடியாலஜிஸ்ட்டுகளும், சோனாலாஜிஸ்டுகள் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் கடந்த 12.6.2018-ல் ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். அதில், எம்பிபிஎஸ் முடித்து 6 மாத வயிறு, அடிவயிறு அல்ட்ரா சோனோகிராபி பயிற்சி பெற்றவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குமாறு அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செய்முறை தேர்வு ஜூலை 19-ல் நடைபெறுகிறது. செய்முறை தேர்வை மதிப்பீடு செய்து 5 வேலைநாளில் தேர்வு முடிவுகளை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி இயக்குனரின் இந்த அறிவிப்பாணை சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே 6 மாத சோனோகிராபி பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குவது தொடர்பான மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, மருத்துவ கல்வி இயக்குனர் 12.6.2018-ல் பிறப்பித்த அரசாணையை செயல்படுத்த ஆகஸ்ட் 13-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ARAM PESA VIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00