மக்கள் விரோத எடப்பாடி அரசில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு : தொடரும் கொலை-கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

Jul 12 2018 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்‍கப்பட்டு கொலை-கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நீடிக்‍கின்றன.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண், காவல் நிலைய வளாகம் முன்பாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்ட 59-பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி காவிரி ஆற்றங்கரையில், ஆண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைஅடுத்து அங்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, லோடு ஏற்றும் வேன் நிறுத்தத்தில், 7 வேன்களில் இருந்து பேட்டரி, தார்பாய்கள் மற்றும் 300 லிட்டர் டீசல் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுபோன்ற தொடர் திருட்டுகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ARAM PESA VIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2944.00 Rs. 3149.00
மும்பை Rs. 2966.00 Rs. 3141.00
டெல்லி Rs. 2979.00 Rs. 3155.00
கொல்கத்தா Rs. 2979.00 Rs. 3152.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00