காஞ்சிபுரத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி 8 வழிச்சாலைக்கான நிலம் அளவிடும் பணி : அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுது பெண்கள் எதிர்ப்பு

Jul 12 2018 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டு வழிச் சாலைக்கு பொதுமக்‍களின் கடும் எதிர்பையும் மீறி, நிலங்களை அளவிடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் காலில் விழுந்து அப்பகுதி பெண்கள் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - சேலம் எட்டுவழி சாலைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதிகளில் நிலத்தை அளந்து கல் நடும் பணி, பொதுமக்‍களின் கடும் எதிர்ப்புகளை மீறி இரண்டாவது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு சேந்தமங்கலம் பகுதியில் நேற்று காலை முதல், நிலத்தை அளக்கும் பணிகள் தொடங்கின. இதேபோன்று உத்திரமேரூர் அருகே சீத்தனஞ்சேரி பகுதியிலும் நிலங்களை அளவிடும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று விவசாய நிலங்களை அளக்க வந்த அதிகாரிகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடியிருப்புகளையும் அகற்றிவிட்டு 8 வழி சாலை அமைக்க அதிகாரிகள் வந்தபோது, அவர்களது காலில் விழுந்து பெண்கள் கதறி அழுதனர். அதையும் பெருட்படுத்தாமல் பலத்த போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலங்களை சர்வே செய்யும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருவதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00