மீன்கள் மீது ரசாயனம் செலுத்துவதாக பரவும் வதந்தி : கும்பகோணத்தில் கடையடைத்து மீன் வியாபாரிகள் கடும் கண்டனம்

Jul 12 2018 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மீன்கள் மீது ரசாயனம் செலுத்துவதாக பரவும் வதந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து, கும்பகோணம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் இன்றும், நாளையும் கடையடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க மனித உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படும் மருத்துவ ரசாயனமான ஃபார்மலின் என்ற திரவத்தை, மீன்களுக்குள் செலுத்துவதாக அண்மையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த தகவல் ஒரு சில பத்திரிக்கைளிலும் செய்தியாக வெளியானது. இந்த செய்திகள் எதிரொலியாக மீன்வளத்துறை அதிகாரிகள் கும்பகோணம் மீன் மார்க்கெட்டிற்கு சென்று மீன்களை பரிசோதித்தனர். தொடர்ந்து கெடும் நிலையில் இருந்த மீன்களை எடுத்துச் சென்றனர். இதனால் தாங்கள் நேர்மையுடன் செய்யும் தொழில் பாதிக்கப்படுவதாக கும்பகோணம் மீன் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது போன்ற வதந்திகள் பரவுவதைக் கண்டித்து கும்பகோணம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் தங்கள் கடைகளை இன்றும், நாளையும் அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் யாராக இருந்தாலும், தமிழக அரசும், காவல்துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கும்பகோணம் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00