பேராசிரியை நிர்மலாதேவி வழக்‍கில் முன்னாள் மாணவர் கருப்பசாமிக்‍கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை மறுப்பு - மாணவிகளின் நலன் கருதி குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விட முடியாது என அறிவிப்பு

Jul 12 2018 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
பேராசிரியை நிர்மலாதேவி வழக்‍கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாணவர் கருப்பசாமிக்‍கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை மறுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்‍கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், தனக்‍கு ஜாமீன் வழங்கக்‍கோரி மாணவர் கருப்பசாமி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த மனு நீதிபதி திரு.ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது.

அப்போது, மாணவிகளின் நலன் கருதி இவ்வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விட முடியாது என்றும், இதன்பேரில் கருப்பசாமிக்‍கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சிறைச்சாலையில் வைத்தே விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஜாமீன் கோரி இவ்வழக்‍கில் மனு தாக்‍கல் செய்யக்‍கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார். செப்டம்பர் 10ம் தேதிக்‍குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்‍கல் செய்ய சி.பி.சி.ஐ.டிக்‍கு உத்தரவிட்ட நீதிபதி, செப்டம்பர் 24ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றம், 6 மாதத்திற்குள் வழக்‍கு விசாரணையை முடிக்‍க வேண்டும் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00