தேனியில் வாலிபரை மதுபோதையில் கண்மூடித்தனமாகத் தாக்கிய போலீசார் : காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Jul 12 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனியில், வாலிபரை மதுபோதையில் கண்மூடித்தனமாகத் தாக்‍கிய போலீசாரைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் போடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அந்த வழியாக பிரபு என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை, போடி நகர தலைமை காவலர் ஆனந்த் மற்றும் காவலர் ஜெயராம் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தியதாகக்‍ கூறப்படுகிறது. அப்போது தனது வீடு அருகில் உள்ளதால், வீட்டுக்‍குச் சென்றுவிட்டு வருவதாக பிரபு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் இருவரும், பிரபுவை கண்மூடித்தனமாக பெல்ட் மூலம் சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரபுவைத் தாக்‍கிய தலைக்‍ காவலர் ஆனந்த் மதுபோதையில் இருந்ததாகக்‍ கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதி மக்‍கள் போடி நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபுவை தாக்‍கிய காவலர்களை பதவிநீக்‍கம் செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00