கழக துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் ஆலோசனைப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் - உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் : ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Jul 12 2018 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்‍கை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும், துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்‍கப்பட்ட மாற்றுக்‍ கட்சியினர் அதிலிருந்து விலகி, கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் நாகலூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 200-க்கும் மேற்பட்டோர், நாகை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.ஆர்.சந்திரமோகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இதனிடையே, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திரளானோர் ஆர்வமுடன் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டக்‍ கழகச் செயலாளர் முத்தையன், ஜெயங்கொண்டம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் மற்றும் நகரக்‍ கழக செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2944.00 Rs. 3149.00
மும்பை Rs. 2966.00 Rs. 3141.00
டெல்லி Rs. 2979.00 Rs. 3155.00
கொல்கத்தா Rs. 2979.00 Rs. 3152.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00