மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் விவகாரம் - ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க அரசு முயற்சி : விவசாயிகளை ஏமாற்றி அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதாக புகார்

Jul 12 2018 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் 4 வழிச்சாலை அமைக்‍கும் விவகாரத்தில், ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை நான்கு வழிச்சாலைக்கு பெரியார் பாசனத்தில் உள்ள ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட இருபோக நஞ்சை விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் நிலங்களை நான்கு வழிச்சாலைக்கு தர மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிப்பதாக விவசாயிகளை ஏமாற்றி அரசு அதிகாரிகள் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் புகார் அளித்தனர். மேலும் விவசாயம் நடைபெறாத நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து சாலை அமைக்க அரசு முயல்வதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2884.00 Rs. 3084.00
மும்பை Rs. 2905.00 Rs. 3076.00
டெல்லி Rs. 2917.00 Rs. 3090.00
கொல்கத்தா Rs. 2917.00 Rs. 3087.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00