4 வழி சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்காத அரசு : நீதிமன்றம் உத்தரவிட்டும் மெத்தனம் காட்டும் எடப்பாடி அரசுக்கு கண்டனம்

Jul 13 2018 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் - ஆத்தூர் 4 வழி சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, 9 ஆண்டுகளாக இழப்பீட்டு தொகை வழங்காமல் அரசு இழுத்தடிப்பதற்கு வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக ஊளுந்தூர்பேட்டை வரை 4 வழி சாலை அமைக்‍க, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலங்களை கொடுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, சந்தை மதிப்பை விட கூடுதல் தொகை வழங்கபடும் என்று அறிவித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலங்களை கையைகப்படுத்தியது. ஆனால், இதுவரை அதற்குரிய தொகையை வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது. இதனையடுத்து, பாதிக்‍கப்பட்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பயனும் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்‍கு உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திற்க்‍கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவு விட்டு 6 மாதத்திற்கு மேல் ஆகியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்‍க இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்‍கின்றனர்.

சொந்த மாவட்டத்திலேயே நிலங்களை கொடுத்து 10 ஆண்டுகள் ஆகியும் நஷ்டஈடு தொகை கிடைக்காமல் அவதிபடும் விவசாயிகளுக்‍கு, எடப்பாடி பழனிசாமி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆரவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது 8 வழி சாலை அமைக்க தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி, இந்த பிரச்சனையில் தீவிரம் காட்டாதது ஏன்? என்றும் வினவியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00