ஜெயா டிவி செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் நகருக்‍குள் மாநகரப் பேருந்துகள் இயக்‍கப்படுவதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி

Jul 14 2018 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெயா டிவி செய்தி எதிரொலியாக, திருப்பரங்குன்றம் நகருக்‍குள் மாநகரப் பேருந்துகள் இயக்‍கப்படுவதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு மாநகரப் பேருந்துகள் செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக செல்வதால் பொதுமக்‍கள் கடும் அவதிக்‍குள்ளாகினர். ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் அதிகரித்தன. பள்ளி மாணவர்கள், முதியவா்கள் தண்டவாளத்தை கடப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பாலத்தில் பேருந்துகள் செல்லமுடியாமல் பயனற்று கிடப்பதாகவும் கடந்த மாதம் 24-ம் தேதி ஜெயா தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில், ஜெயா டிவி செய்தி எதிரொலியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவையடுத்து, திருமங்கலம் மற்றும் திருநகா் செல்லும் அனைத்து பேருந்துகளும் திருப்பரங்குன்றம் நகருக்குள் வந்து செல்கின்றன. மேலும் பாலம் சீரமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்‍களும், பக்‍தர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களின் கோரிக்‍கையை வெளிப்படுத்திய ஜெயா டி.வி.க்‍கு அவர்கள் நன்றி தெரிவித்துக்‍ கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00