தமிழகத்தில் லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம், வழக்குகளுக்கு தீர்வு - சமரச முறையில் தீர்வுகாண நடவடிக்கை

Jul 14 2018 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, சமரச முறையில் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை இருதரப்பினரிடமும் சமரசம் பேசி தீர்வுகாணும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி தலைமையில் நடைபெற்று வருகிறது. நிலுவையில் உள்ள மூன்றாயிரத்து 558 வழக்குகளுக்குத் தீர்வுகாண, இந்த லோக் அதாலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரிடமும் சமரசம் பேசித் தீர்வுகாணப்பட்டு வருகிறது. முதல் வழக்காக, கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோவில் சென்ற மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், லாரி விபத்தில் பலியானது தொடர்பாக 35 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, அவரது மனைவி தொடுத்திருந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருதரப்பினரிடமும் சமரசம் பேசி, இழப்பீட்டு நிறுவனம் மூலம் 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கான ஆணையை சேகரின் மனைவியிடம், மாவட்ட நீதிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி திரு. இளங்கோவன் தலைமையில், மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. விபத்து, குடும்பநலன் மற்றும் வங்கி பண விவகாரம் போன்ற மூன்றாயிரத்து 500 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டாயிரம் வழக்குகளுக்காவது தீர்வுகாணப்படும் என மாவட்ட நீதிபதி திரு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 7 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் நீதிமன்ற அமர்வும், துறையூரில் 3 அமர்வும், முசிறி, மணப்பாறை மற்றும் லால்குடியில் தலா 2 அமர்வும் சமரச முறையில் 8 ஆயிரத்து 800 வழக்குகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், ஜீவனாம்சம், வங்கி வாராக்கடன், தொழிலாளர் இழப்பீடு வழக்குகள் போன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்வுகாணப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00