நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக கூட்டணி அமோக வெற்றிபெற்று பிரதமரை தீர்மானிக்‍கும் சக்‍தியாக விளங்கும் - கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி

Jul 15 2018 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் தலைமையிலான கூட்டணி, பெருவாரியான மக்‍களவைத் தொகுதிகளில் அமோக வெற்றிபெறும் என்றும், தேர்தலுக்‍குப் பின்னர் யார் பிரதமர்? என்பதை தீர்மானிக்‍கும் மகத்தான சக்‍தியாக, கழகக்‍ கூட்டணி எம்.பி.க்‍கள் திகழ்வார்கள் என்றும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில் செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்தார். மக்‍கள் விரோத எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்‍கு வரும் என்றும், மறைந்த மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை, கழகம் அமைக்‍கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து திருச்சி சென்ற, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, விமான நிலையத்தில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர்கள் திருச்சி திரு. ஆர். மனோகரன், திருமதி. சாருபாலா தொண்டைமான், திரு. பாளை அமரமூர்த்தி, திருச்சி மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஜே. சீனிவாசன், தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ராஜசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள், பல்லாயிரக்‍கணக்‍கான கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் திரு. டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், தமிழகத்தின் தற்போதைய மக்‍கள் விரோத ஆட்சியாளர்கள், விரைவில் அரசியலில் இருந்தே அகற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.

திருச்சி வடக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் தொகுதியில், வண்ணாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் செண்டை மேளங்கள் முழங்க திரு. டிடிவி தினகரனுக்‍கு, கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

பெருந்திரளான பெண்கள் உட்பட, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍களிடையே உரையாற்றிய திரு. டிடிவி தினகரன், விரைவில் வரவிருக்‍கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்‍களின் பேராதரவோடு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் மகத்தான வெற்றிபெற்று, மறைந்த மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மலரச் செய்யும் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, திண்டுக்‍கல் வந்தடைந்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. தங்கதுரை, மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ராமுத்தேவர், மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.நல்லுசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திண்டுக்‍கல் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00