பெருந்தலைவர் காமராஜர் 116-வது பிறந்தநாள் : திருவுருவச் சிலைக்கு ஏராளமானோர் மலர்தூவி மரியாதை - தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Jul 15 2018 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்‍கு ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

காமராஜரின் பிறந்தநாளையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், வடசென்னை வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.வெற்றிவேல், வடசென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சந்தான கிருஷ்ணன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.கலைராஜன், தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.செந்தமிழன், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.சுகுமார் பாபு, திரு.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காமராஜரின் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கேக்‍ வெட்டியும், அன்னதானம் வழங்கியும் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டக்‍கழகம் சார்பில், மதுரை விளக்‍கத்தூண் பகுதியில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்‍கு, கழகத்தினர் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம், மதுரை மாநகர் வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ம.ஜெயபால், கழக மகளிரணி செயலாளர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்ட மகளிர் அணியினர், கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டியில், தனியார் பள்ளி மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து, பள்ளிப் பாடத்துடன், நூலகப் புத்தகங்களையும் படித்து பொது அறிவை வளர்த்துக்‍கொள்ள உறுதிமொழி ஏற்றனர். காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் முக்‍கிய வீதிகள் வழியாக மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

விருதுநகரில், காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் கிழக்கு மாவட்டக்‍கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.தா. இன்பத்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜரின் புகைப்படங்களை பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டக்‍கழகம் சார்பில் கொட்டாரம் அருகே பெருமாள்புரத்தில் சமபந்தி விருந்து விழா நடைபெற்றது. இதில், கழக அமைப்புச் செயலாளரும், மாவட்டக்‍ கழகச் செயலாளருமான திரு.கே.டி.பச்சைமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்திச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றிய பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்‍கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காமராஜர் பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்‍ ஒழிப்பு விழிப்புணர்வு சேவை தொடங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00