பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்‍கல்லில் உள்ள திருவுருவச் சிலைக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் பெருந்திரளாகப் பங்கேற்பு

Jul 15 2018 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்‍கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளையொட்டி திண்டுக்‍கல் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்‍கும் அவரது திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவிக்‍க வந்த கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனுக்‍கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பல்லாயிரக்‍கணக்‍கானோர் திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில், காமராஜரின் திருவுருவச் சிலைக்‍கு திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.பழனியப்பன், கழக அவைத் தலைவர் திரு.அன்பழகன், கழகப் பொருளாளர் திரு. ரெங்கசாமி, அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ராமுத்தேவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00