குன்னூரில் சாலை வசதிகள் இல்லாததால் பழங்குடியினர் வேதனை : நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலம்

Aug 10 2018 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்னூர் அருகே பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தராததால், நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பெட்டுமந்து கிராமத்தில் தோடர் இன பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசின் சார்பில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. கடந்த 18 ஆண்டுகளாக சாலை அமைத்துதர பொதுமக்கள் போராடி வரும் நிலையில் இதுவரை சாலை அமைக்கப்படாமல் உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்காததால், 108 ஆம்புலென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் வருவதில்லை.

இதனால், நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வனப்பகுதி வழியாக சுமந்து கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. சாலை வசதியில்லாத காரணத்தால் இவர்களின் பிள்ளைகளை விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைத்து வருகின்றனர். அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு பெட்டு மந்து கிராமத்திற்கு உடனடியாக சாலை அமைத்து பழங்குடியினர் உயிர்களை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00