கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை : காட்டாற்று வெள்ளத்தை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை

Aug 10 2018 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாகர்கோவிலில் பழையாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளத்தை சேமித்து வைக்க, தடுப்பணைகள் கட்ட அரசு முன்வர வேண்டும் என, விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென் மேற்குப் பருவ மழை உரிய நேரத்தில் தொடங்கியது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் வழியாகச் செல்லும் பழையாற்றில் வந்து கொண்டு இருக்கும் காட்டாற்று வெள்ளம், மணக்குடி கடலில் வீணாக கலக்கிறது. இந்நிலையில், தடுப்பணைகள் கட்டினால், கடலில் வீணாகும் தண்ணீரை சேமித்து, கோடை காலத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தலாம் என, தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இதில் கவனம் செலுத்தாமல், எட்டு வழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு பல கோடி ரூபாயை வீணடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கால்வாய்கள், குளங்கள் கூட முறையாக தூர் வாரப்படாமல் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 315 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நீர் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00