நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மழையில் நனைந்து நெல்கொள்முதல் சேதம் : விவசாயிகள் கவலை - அதிக அளவில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Aug 10 2018 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் பெய்த மழை காரணமாக, நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில், காவிரி நீர் கிடைக்கப்பெறாத நிலையில், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதிகளில், நிலத்தடி நீரைக்கொண்டு 87 ஆயிரம் ஏக்கரில் குறுவை நடவு செய்யப்பட்டது. முன்பட்ட குறுவை நெல்கள் கடந்த 20 தினங்களாக அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்துவிட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் மிக தாமதமாக கடந்த 1-ம் தேதியன்றுதான் திறக்கப்பட்டது, மயிலாடுதுறை தாலுகாவில் 5 இடங்களில் மட்டும் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு நெல்கொள்முதல் நிலையத்தில் 800 சிறிய நெல்மூட்டை சிப்பங்கள் மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சராசரியாக ஒரு நெல் கொள்முதல் நிலையத்துக்கு நான்காயிரம் நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் திறந்த வெளிகளில், தங்கள் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர். ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும், ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழையால், மணல்மேடு, வில்லியநல்லூர், இளந்தோப்பு ஆகிய கிராமங்களில், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. தற்போது, 17 சதவிகித ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக, தங்களது நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நனைந்த மூட்டைகளை ஈரப்பதத்தை காரணம்காட்டி, கொள்முதல் செய்யாமல் இருக்கக்கூடாது என்றும், மூட்டைகள் தேங்காத வண்ணம், அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00