ஈரோட்டில் கோலாகலமாக நடைபெறும் ஈரோடு குதிரை சந்தை : இசைக்கேற்ப நாட்டியம் ஆடும் குதிரை - பொதுமக்கள் ஆர்வம்

Aug 10 2018 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்றுவரும் குதிரை சந்தையில், இசைக்கேற்ப நாட்டியம் ஆடும் குதிரையை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள அருள்மிகு குருநாதசுவாமி ஆடித்திருவிழாவையொட்டி, 4 நாள் நடைபெறும் குதிரை சந்தை, கடந்த 8-ம்தேதி தொடங்கியது. இங்கு மார்வார், கத்தியவார், இங்கிலீஸ் பீட் குதிரை, நாட்டு குதிரை, ரேக்ளா பந்தய குதிரை, என ஆயிரக்கணக்கான குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இங்கு, இசைக்கேற்ப நாட்டியம் ஆடும் குதிரை, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்த குதிரைகளுக்கு, சுழிகளை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் நிறங்களைப் பார்த்தும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் குதிரைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த குதிரைகள், 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகின்றன.

மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், தனது குதிரைகளுக்கு பயிற்சி அளிக்க, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காட்டுப் பகுதியை தேர்வு செய்து, குதிரைகளுக்கு லாடம் அடித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். இதனையறிந்த குதிரை வியாபாரிகள், தங்களது குதிரைகளை அங்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். அதுவே நாளடைவில் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய குதிரை சந்தையாக மாற காரணமானது.

இங்கு விற்பனையாக உள்ள விதவிதமான குதிரைகளை, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00