கேரளாவில் கனமழையால் 6 கோடி ரூபாய் காய்கறிகள் தேக்கம் : மக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

Aug 14 2018 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளா மாநிலத்தில் கடும் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கோவையில் உள்ள மொத்த விற்பனை மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அனுப்ப முடியாமல் மூட்டை, மூட்டையாக தேங்கி நிற்கிறது. இதனால் 6 கோடி ரூபாய் அளவிற்கு காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 750 டன் காய்கறிகள் சென்று வரும் நிலையில், அங்கு நிலவும் கனமழை வெள்ளத்தால் போக்குவரத்து மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு, தினசரி 400 டன் வீதம் காய்கறிகள், பழங்கள் கடந்த ஐந்து நாளாக கோவை, மேட்டுப்பாளையத்தில் தேக்கமடைந்துள்ளன. ஆறு கோடி ரூபாய் அளவிற்கான காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் மிகவும் கவலைஅடைந்துள்ளனர்.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கேரளாவில் கனமழை பாதிப்பு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், காய்கறிகள், பழங்கள் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தக்காளி, வெங்காயம் ஆகியவை அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளதால், கோவையில் காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது.

இதனிடையே, கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஈரோடு மாவட்ட மக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில், 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் லுங்கிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00