கழக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கப்பட்ட வழக்கு : வரும் 16-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

Aug 14 2018 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக எம்.எல்.ஏ.க்‍கள் 18 பேர் தகுதி நீக்‍கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்‍கில், அனைத்து தரப்பினரின் விவாதம் நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாளுக்‍கு வழக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள், திரு. தங்கதமிழ்செல்வன், திரு. P. பழனியப்பன், திரு. V. செந்தில்பாலாஜி, திரு. P. வெற்றிவேல், திரு. எம். ரெங்கசாமி, திரு. T.A. ஏழுமலை உள்ளிட்ட 18 பேரை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தகுதி நீக்‍கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கை, 3-வது நீதிபதி திரு.M. சத்யநாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 4-ம் தேதி இந்த வழக்‍கு தொடர்பான விசாரணையை அவர் தொடங்கினார். தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்‍கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு.P.S. ராமன், முதலமைச்சரை ஆளுநரால் மாற்ற முடியாது என்பதாலும், எம்.எல்.ஏ.க்‍கள்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய முடியும் என்ற அடிப்படையிலும், ஆளுநரை சந்தித்து, முதலமைச்சர் மீதான அதிருப்தியை தங்கள் தரப்பினர் மனு அளித்ததாகக் கூறினார். தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்‍கள் சார்பில் மூத்த வழக்‍கறிஞர் திரு. மோகன் பராசரனும் ஆஜராகி வாதிட்டார்.

இந்த வழக்‍கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அனைத்து தரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்‍கு​விசாரணையை நாளை மறுநாளுக்‍கு நீதிபதி திரு. M. சத்யநாராயணன் ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00