எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட இந்திய மக்‍கள் அனைவரும் உழைத்திட உறுதியேற்போம் : இந்தியாவின் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து

Aug 14 2018 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட இந்திய மக்‍கள் அனைவரும் உழைத்திட உறுதியேற்போம் என இந்தியாவின் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், ஆங்கில ஆதிக்‍கத்தின் பிடியிலிருந்து நம் தாய்த் திருநாடு விடுதலை கண்ட இன்பத் திருநாளாம் இந்த இனிய நன்னாளில், இந்திய மக்‍கள் அனைவருக்‍கும் தமது இதயம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்து‍களை தெரிவித்துக்‍ கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களின் பேராதிக்‍கம் வீழ்த்தப்பட்டு, சுதந்திர சுவாசக்‍ காற்றை நாம் சுவாசித்திட, போர்க்‍களங்களிலும், போராட்டக்‍ களங்களிலும் முன்னின்று தங்கள் இன்னுயிரையும், இன்ப வாழ்வையும் தியாகம் செய்த தியாகச் சீலர்களை இந்நன்னாளில் நினைவுகூர்ந்து போற்றி வணங்கிடுவோம் -

நாட்டுப்பற்றிலும், அதன் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்திட்ட நம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்‍கும், தியாகிகளுக்‍கும் பெருமைகளையும், மக்‍கள் வாழ்வில் வசந்தத்தையும் சேர்ப்பதில் முதன்மையாக திகழ்ந்திட்டார் என்பதை பெருமையோடு நினைத்துப் பார்ப்பதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அரும்பாடுபட்டு பெறப்பட்ட சுதந்திரம், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு துணைக்‍ கண்டமாக இந்திய திருநாட்டை திகழச் செய்து வருகிறது - எனினும், நம் சுதந்திர தேசம் எட்டவேண்டிய உயரத்தையும், இலக்‍கையும் அடையவிடாமலும், தேசத்தின் முன்னேற்றத்தை முடக்‍க முனையும் தீமைகள் மற்றும் தடைகளாகத் திகழும் பிரிவினைவாதம், வன்முறை, ஆதிக்‍க மனப்பான்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என அனைத்திற்கும் விடைகொடுத்து, பரிபூரண சுதந்திரத்தை கருத்தாகவும், நாம் காணும் காட்சியாகவும், அனைத்து நிலைகளிலும் அமைத்திடுவோம் -

எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட, இந்திய மக்‍கள் அனைவரும் உழைத்திட இந்த 72-வது சுதந்திர தினத்தில் உறுதியேற்றிடுவோம் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00