தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்‍குகள் சி.பி.ஐ.க்‍கு மாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Aug 14 2018 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்‍குகளையும் சி.பி.ஐ.க்‍கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன. இதன் உச்சகட்டமாக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்‍கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி பல்வேறு வழக்‍குகள் தொடரப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்‍கு உத்தரவிட வேண்டும் - துப்பாக்‍கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்‍கைகளை முன்வைத்து ஏராளமான வழக்‍குகள் தொடுக்கப்பட்டன.

பின்னர் இந்த வழக்‍குகள் அனைத்தும் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இவற்றின் வாத பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் திரு. சி.டி.செல்வம், திரு.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்‍குகளையும் சி.பி.ஐ விசாரிக்‍க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போடப்பட்ட வழக்‍குகளை ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00