தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை : மோசமான சாலையால் நோயாளிகள் அவதி
Sep 14 2018 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஒட்டபிடாரத்தில் செயல்படும் அரசு மருத்துவமனைக்கு, 30 கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும், ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு குறுகலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆட்டோவில் வரும் நோயாளிகளை, மருத்துவமனைக்கு தொலைவிலேயே இறக்கிவிட்டுச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.