தண்ணீரின்றி கருகும் நெற்பயிரை காப்பாற்ற முன்வராத எடப்பாடி அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

Sep 14 2018 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தண்ணீரின்றி கருகும் நெற்பயிரை காப்பாற்ற முன்வராத எடப்பாடி பழனிசாமி அரசைக்‍ கண்டித்து, திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியும், எடப்பாடி அரசின் நிர்வாகத் திறமையின்மையால், பாசன ஆறு, வாய்க்‍கால்கள் தூர்வாரப் படாததால், கடைமடைப் பகுதிகளுக்‍கு தண்ணீர் வரவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரளம், திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோமல், திருக்‍காரவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல ஆயிரம் ஏக்‍கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிற்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், எடப்பாடி அரசைக்‍ கண்டித்து, திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்க்‍கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00