தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் : வரும் 17-ஆம் தேதி சென்னையில் தந்தை பெரியார் திருவுருவச்சிலைக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்
Sep 14 2018 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17-ஆம் தேதி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுத்தறிவு பகலவனாய் சுடர்விட்டு பிரகாசித்து, தனது சிந்தனையால் சமூக புரட்சிக்கு வித்திட்ட மாபெரும் புரட்சியாளர், பார்போற்றும் வேந்தர் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 17-ஆம் தேதி, காலை 11 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.