சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை விரைவில் அறிமுகம் - சோதனை நேரத்தை மிச்சப்படுத்த நடவடிக்‍கை

Sep 20 2018 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை, விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விமானநிலையங்களில் தற்போதுள்ள சோதனை நடைமுறைகளில் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்துக்‍கிடக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்‍க, பயணிகள் சோதனையை எளிமையாக்க, நவீன முறையை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'டிஜி யாத்ரா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி விமான நிலையத்தில் பயணிகள் நுழையும் வாயிலில் கேமராக்கள், ஸ்கேனர்கள் பொருத்தப்பட்ட இ-கேட் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் வழியே செல்லும் போது பயணிகளை ஸ்கேன் செய்து விடுவதுடன், கண் விழிகளும் பதிவாகி விடும். இந்த எல்லையைத்தாண்டி உள்ளே நுழைந்து விட்டால், பயணியின் முகம் ஸ்கேன் செய்யப்படுகிறது. மேலும் பயணியின் டிக்கெட் மற்றும் வரிசை எண் ஆகியவையும் பதிவாகி விடும். அடுத்த கேட்டில் நுழையும் போது அவரது அடையாளங்கள் தானாகவே சரிபார்க்கப்படுகிறது.

இத்திட்டம், முதல் கட்டமாக புனே, வாரணாசி, கொல்கத்தா, விஜயவாடா விமான நிலையங்களில் முதலில் அமல் படுத்தப்படுகிறது. இரண்டாவது கட்டமாக சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00