விலைவாசி உயர்வுக்‍கு வழிவகுத்த மத்திய அரசின் கட்டளைப்படி எடப்பாடி அரசு செயல்படுகிறது - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Sep 21 2018 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழலில் சிக்கியுள்ளதாகவும், பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த மத்திய அரசின் கட்டளைப்படி எடப்பாடி அரசு செயல்பட்டு வருவதாகவும், கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் சந்திப்பு பயணத்தின் நான்காவது கட்டமாக, கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரட்சிப் பயணம் மேற்கொண்டார். உடுமலைப்பேட்டை, சாமராயபட்டி, குமரலிங்கம் பகுதி, குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், திரு.டிடிவி தினகரனுக்‍கு, கழகத்தினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிஞ்சிக்கோட்டை நால்ரோடு பகுதியில் திரண்டிருந்த மக்களிடையே பேசிய திரு.டிடிவி தினகரன், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழலில் சிக்கியுள்ளதாகவும், விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தளி பேரூராட்சி, எரிசினம்பட்டி, கோலார்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து திரு.டிடிவி தினகரன் எழுச்சியுரையாற்றினார். பெதப்பம்பட்டியில் திரண்டிருந்த மக்களிடையே எழுச்சியுரை ஆற்றிய திரு.டிடிவி தினகரன், பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி, விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த மத்திய அரசின் கட்டளைப்படி எடப்பாடி அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00