கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், 2-வது நாளாக இன்று மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் - திருப்பூர் புறநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட மடத்துக்‍குளம், தாராபுரம் தொகுதிகளில் மக்‍களை சந்தித்து எழுச்சியுரை

Sep 21 2018 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், 2-வது நாளாக இன்று, திருப்பூர் புறநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட மடத்துக்‍குளம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில், நான்காம் கட்ட மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். இவ்விரு தொகுதிகளிலும் 5 இடங்களில் மக்‍களை சந்தித்து எழுச்சியுரையாற்றுகிறார்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வாழ்த்துகளுடன் செயல்படும், துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தமிழகத்தில் மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைத்திடும் வகையில், மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கெனவே, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று கட்ட மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்ட திரு. டிடிவி தினகரன், திருப்பூர் புறநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட தொகுதிகளில் நேற்று முதல் 3 நாட்களுக்‍கு மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்‍குளம் தொகுதிகளின் பல்வேறு இடங்களில் எழுச்சியுரையாற்றிய திரு. டிடிவி தினகரனுக்‍கு, இசைக்‍கருவிகள் முழங்க வாழ்த்தொலியுடன் திரளான கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதையுடனும் வரவேற்றனர்.

இந்நிலையில், 2-வது நாளாக இன்று மடத்துக்‍குளம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திரு. டிடிவி தினகரன் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 5 இடங்களில் மக்‍களை சந்தித்து எழுச்சியுரையாற்றுகிறார். மடத்துக்‍குளம் நால்ரோடிலிருந்து, அவர் தனது மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை தொடங்குகிறார். கணியூர் பேருந்து நிலையம், தளவாய்ப்பட்டணம் பேருந்து நிலையம், தாராபுரம் அண்ணாசாலை புதிய காவல் நிலையம் அருகில் மக்‍களை சந்தித்து எழுச்சியுரையாற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், குன்டடம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்றைய மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகள், திருப்பூர் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட கழக மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள். கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00