ஆர்.கே.நகர் தொகுதியில் ஆட்டோ கேஸ் நிலையத்தை மூட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் : போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பி. வெற்றிவேல் சந்தித்து ஆதரவு

Sep 21 2018 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்‍குட்பட்ட காசிமேட்டில், மக்‍களுக்‍கு பாதிப்பை ஏற்படுத்தக்‍கூடிய ஆட்டோ கேஸ் நிலையம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்‍கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே. நகர் தொகுதிக்‍குட்பட்ட காசிமேட்டில், பொதுமக்‍களுக்‍கு பாதிப்பை ஏற்படுத்தக்‍கூடிய ஆட்டோ கேஸ் நிலையம் திறக்‍கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் இருந்தே அப்பகுதி மக்‍கள் எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் பலமுறை மனு அளிக்‍கப்பட்டது. எனினும், நடவடிக்‍கை எடுப்பதாகக்‍ கூறி அதிகாரிகள் பொதுமக்‍களை நம்பவைத்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நேற்று முன்தினம் ஆட்டோ கேஸ் நிலையம் அப்பகுதியில் திறக்‍கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆர்.கே. நகர் மக்‍கள், ஆட்டோ கேஸ் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்‍களுக்‍கு ஆதரவாக கழக வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வெற்றிவேல் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00