திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி நகரக் கழகச் செயலாளரின் மனைவி நளினி மறைவுக்கு, கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
Oct 12 2018 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி நகரக் கழகச் செயலாளரின் மனைவி திருமதி. நளினி மறைவுக்கு, கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி நகர கழகச்செயலாளர் திரு. ஆவடி S.K.S. மூர்த்தியின் மனைவி திருமதி. நளினி, அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.