தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Oct 12 2018 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு போக்குவரத்துக்‍ கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நி‌லையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய ‍பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகரில் உள்ள மாநகரப் போக்குவரத்துக்‍ கழக பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களிலிருந்து தீபாவளி சிறப்பு ‍பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த ‍பேருந்துகள் நவம்பர் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் 4 ஆயிரத்து 542 பேருந்துகள் சேர்த்து சென்னையிலிருந்து 11 ஆயிரத்து 367 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களிலிருந்து இந்த 3 நாட்களுக்கு 9 ஆயிரத்து 200 சிறப்பு பேருந்துகள் உள்பட 20 ஆயிரத்து 567 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு நவம்பர் 7-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 4 ஆயிரத்து 207 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 7 ஆயிரத்து 635 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நவம்பர் 1ம் தேதி தொடங்குகிறது.

இந்த பேருந்துகளில் பயணம் செய்ய கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூந்தமல்லி பேருந்து பஸ் நிலையத்தில் 1, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 உள்பட 30 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00