பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்‍கீரன் பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது- ஆளுநர் மாளிகை விளக்‍கம்

Oct 12 2018 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, நக்‍கீரன் பத்திரிகையில் வெளியான செய்தியை, ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஆளுநர் மாளிகை இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்‍கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நக்‍கீரன் பத்திரிகையில் வெளியான ஆளுநர் குறித்த செய்திகள், மஞ்சள் பத்திரிக்‍கைக்‍கு ஒப்பானவை - தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் செய்திகள் வெளியாகின்றன - ஆளுநருக்‍கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ அச்சுறுத்தல் விடுப்பதை பொறுத்துக்‍கொள்ள முடியாது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் நிர்மலா தேவியுடன் ஆளுநர் மாளிகையை தொடர்புப்படுத்தி வெளியான அனைத்து செய்திகளும் முழுக்‍க முழுக்‍க பொய்யானவை என்றும் ஆளுநர் மாளிகையின் செய்திக்‍குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அருப்புக்‍கோட்டை கல்லூரி பேராசிரியையான நிர்மலாதேவி, கடந்த ஒருவருட காலமாக ஆளுநர் மாளிகைக்‍கு வந்ததில்லை என்றும், ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் யாருடனும் அவருக்‍கு தொடர்பில்லை என்றும் இந்த அறிக்‍கையில் விளக்‍கி கூறப்பட்டுள்ளது. காவல்துறையிடம் நிர்மலாதேவி தெரிவித்த வாக்‍குமூலத்தின் அடிப்படையில் உண்மைகள் வெளிவரும் என ஆளுநர் மாளிகையின் செய்திக்‍குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00