திருவள்ளூர் மாவட்டம் கள்ளிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு : தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு

Oct 12 2018 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே முத்தமிழ் நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர். மூகாம்பிகை நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அதில் 589 வீடுகள் மட்டும் ஆக்ரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்தப்பகுதி குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரம், சாலை வசதி, குடும்ப அட்டை, ஆதார் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றப்போவதாக தெரிவித்தனர்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த‍ அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்புடன், 12 ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு வீடுகளை இடித்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நான்கு பேர் குழந்தைகளோடு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00