மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்‍கழக மாணவர்கள் மீது இரக்‍கமின்றி தடியடி நடத்தி, மாணவர் விரோத போக்‍கை கையாண்டு வரும் பழனிசாமி அரசுக்‍கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தமிழ்ப்பற்று இருப்பதுபோல் நாடகமாடி வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளதாகவும் கருத்து

Oct 12 2018 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழில் தேர்வு எழுத அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்‍கழக மாணவர்கள் மீது இரக்‍கமின்றி தடியடி நடத்தி, தொடர்ந்து மாணவர் விரோத போக்‍கை கையாண்டு வரும் பழனிசாமி அரசுக்‍கும், காவல்துறைக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்ப்பற்று இருப்பதுபோல் நாடகமாடி வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால், 12 ஆண்டுகளுக்‍குப் பிறகு நடத்தப்பட்ட காவல்துறையின் தொழில்நுட்ப உதவி ஆய்வாளருக்‍கான தேர்வில், 55 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். பொது அறிவுப் பிரிவில் ஆங்கிலத்தில் மட்டுமே 60 கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், இது தமிழ்வழி பயின்றவர்களுக்‍கு பெரும் அநீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை தேர்வு நடந்தபொழுது, தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்ட நடைமுறைக்‍கு மாறாக, ஆங்கிலத்தில் மட்டுமே 60 கேள்விகள் இந்தமுறை கேட்கப்பட்டது. இதுதொடர்பாக, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தவேண்டுமென்று கோரிக்‍கை பலரால் முன்வைக்‍கப்பட்டுள்ளது.

இதைப்போன்றே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்‍கழக மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதி கோரியும், திடீரென உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்பப்பெறக் கோரியும், அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாணவர்கள் மீது சிறிதும் இரக்‍கமின்றி காவல்துறையை வைத்து தடியடி தாக்‍குதலை நடத்தியதோடு, அவர்கள் மீது பொய் வழக்‍கையும் புனைந்துள்ளனர்.

நீட் தேர்வு முறையில், தமிழ்வழி பாடம் படித்தவர்களுக்‍கு, பெரும் பாதகத்தை மத்திய அரசு செய்ததென்று, ஒட்டுமொத்த தமிழகமே குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில அரசே இதைப்போன்ற கொடுமையை செய்வது பலருடைய வாழ்க்‍கையை கேள்விக்‍குரியாக்‍கியுள்ளது.

தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டதின் பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறோம் என்று போலித்தனமாக கொண்டாடும் இந்த பழனிசாமி அரசின் தமிழ்ப்பற்று என்ன என்பதும் இப்பிரச்சனையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தொடர்ந்து மாணவ விரோத போக்‍கை கையாண்டுவரும் பழனிசாமி அரசிற்கும், மாணவர்கள் மீது கொடூரத் தாக்‍குதல் நடத்திய காவல்துறைக்‍கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்‍ கொள்வதாகவும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது அறிவிக்‍கையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00