தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம்

Oct 12 2018 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய அரசு ஊதியத்திற்கு இணையான ஒய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால், வரும் 25ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தபடும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆங்கில மொழி தேர்வு முறையை கண்டித்து, நெல்லையில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், போராட்டம் நடைபெற்றது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, காவல்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

நாகர்கோவிலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும், விவசாய தொழிலாளர்கள், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களுக்கு நிபந்தனையின்றி பென்ஷன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த, கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில், பேரூராட்சி குப்பை கழிவுகளை கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என கூறிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் காற்றாலை நிறுவனம் விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அனுமதி பெறாத தனியார் மின் நிலையத்தின் இந்த செயலை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00