நெடுஞ்சாலைத்துறையில், 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி, உறவினர்களுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கு - விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Oct 12 2018 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெடுஞ்சாலைத்துறையில், 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி, உறவினர்களுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தொடர்பான டெண்டர்களை, சம்மந்தி உள்ளிட்ட உறவினர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. நெடுஞ்சாலைத்துறை தொடர்பான 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் அளித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தி.மு.க. சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லாததால், வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜகதீஷ் சந்திரா இன்று உத்தரவிட்டார். மூன்று மாதத்திற்குள் ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அமைச்சர்கள் மீது, ஏராளமான ஊழல் புகார்கள் வெளியாகி வரும் நிலையில், அதுதொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், முதலமைச்சர் மீதான வழக்கையே சி.பி.ஐ.க்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மற்றொரு புயலைக் கிளப்பியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00