எடப்பாடி அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை - கொள்ளை : பொதுமக்கள் அச்சம்

Oct 22 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி அரசின் நிர்வாக சீர்கேட்டால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை - கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு எதிரே உள்ள சமுதாய கூடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நொச்சி நகரை சேர்ந்த விஜய் என்ற இளைஞரை, பத்து பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளால் சரமரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம், சீர்காழி விளந்திசை சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஹசன்அலி என்பவர் நடத்தி வந்த பெட்டிக்‍கடையை மர்ம நபர்கள் உடைத்து, 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். இச்சம்பவம் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் மெயின் ரோட்டில் வசித்து வரும் யசோதை என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியால் வெட்டி விட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை அறுத்து சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரையும், அவரது கூட்டாளியையும் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பதும், பல்வேறு மாவட்டங்களில் இருச்சக்கர வாகனங்களை திருடி விற்று வந்தது தெரிய வந்தது. வாலிபரை கைது செய்த போலீசார், 10 இருச்சக்கர வாகனங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00