சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி - உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல்

Oct 22 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், சபரிமலை வழிபாடு தொடர்பான பிரச்னையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மட்டுமே எதிர் பார்ப்பதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற நிலைப் பாட்டிலுள்ள எம்எல்ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்பட்டு மக்கள் வஞ்சிக்கப் படுவதால், அதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஜெயக்குமார் விவகாரத்தில், அவரும் முதலமைச்சருமே பதிலளிக்க வேண்டுமெனவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திரு. டிடிவி தினகரன், சம்மந்தியின் நிறுவனத்திற்கு டெண்டர் அளித்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு என்றும், இதனை அவர்கள் திரித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00