எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேட்டு : தமிழகம் முழுவதும் நாளுக்குநாள் கொலை -கொள்ளை அதிகரிப்பு

Oct 23 2018 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேட்டால், தமிழகம் முழுவதும் நாளுக்‍குநாள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகரணையில், மேகநாதன் என்பவருக்‍கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து, 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

நெல்லையில், மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில், பெண்ணின் கழுத்தில் இருந்து இரண்டரை சவரன் செயினை, மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பூங்கொடி என்ற பெண் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியபோது இச்சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் கும்பலால், பொதுமக்‍கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கள்ள நோட்டு வைத்திருந்தாக 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆலங்காயம் பகுதியில் உள்ள கடைகளில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் கொடுத்து 3 பேர் பொருட்கள் வாங்கி உள்ளனர். சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து, போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வீரபாண்டியன் என்ற நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் அளித்த தகவலின் அடிப்படையில் துளசிராமன், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான 200 ரூபாய் கள்ள நேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00