தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளை - சிறப்பு பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படவில்லை : ஓட்டை, உடைசல் பேருந்துகளை புறக்கணித்த பயணிகள்

Nov 8 2018 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளி பண்டிகை முடிந்து ஊர்களுக்‍கு திரும்பும் பயணிகளின் வசதிக்‍காக போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், பெங்களுர் போன்ற பெருநகரங்களுக்‍கு பொதுமக்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்‍கப்பட்ட சிறப்பு பேருந்துகள் குறைந்த எண்ணிக்‍கையில் இருந்ததால், ஊர் திரும்பிய பொதுமக்‍கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து புகார் தெரிவித்தும், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தீபாவளி விடுமுறை முடிந்து ஊர்திரும்ப வசதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர், உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு போதுமான வகையில் அரசு பேருந்துகள் இயக்காததால் பயணிகள் கூட்டத்தை சாதகமாக்கி ஆம்னி பேருந்துகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல 3 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டு​கொள்ளவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். (நாகர்கோவில்) தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக நேற்று அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு சென்ற பேருந்துகள் பயணிகள் இன்றி வெறிச்சோடியது. சில பேருந்துகள் தரமற்ற பேருந்துகளாக இருப்பதாலும், தனியார் பேருந்துக்கு இணையான கட்டணமாக இருப்பதால் பயணிகள் அரசு பேருந்தை தவிர்த்துவிட்டு தனியார் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00