ஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு

Nov 15 2018 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ளநீர் வடிகால் கட்டுமான பணிகளுக்‍காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட 740 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்‍கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்‍காட்டி, அந்த டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறப்போர் இயக்‍கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக இன்றைய டைம்ஸ் ஆப்இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளதாக சுட்டிக்‍காட்டியுள்ளார்.

மழைக்‍காலங்களில் புயல் வெள்ள பாதிப்புகளால் மக்‍கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது - இதனைத் தடுக்‍கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர்நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று - அவ்வாறு மக்‍களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றியப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்‍கும் அரசானது, மக்‍களின் நலனை சிறிதும் சிந்திக்‍காத மக்‍கள் விரோத அரசு என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல முடியும் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு - காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம் - இதுதான் பழனிசாமி ஆட்சியின் சாதனை - ஊழல் புகார் மயமான ஆட்சியில் மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருக்‍கிறது என்பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது - மக்‍களின் அடிப்படைவசதிகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சித் துறையில் பூதாகரமாக எழுந்துவரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்‍கிறது - ஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகிவரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனைத் தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துக்‍ கொள்வதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00